Please Visite here - www.cenimagallary.blogspot.com

Monday, March 30, 2009

முடிவுக்கு வந்தது அசின் விவகாரம்: உதவியாளர் வாக்குமூலம்

நடிகை அசின் உதவியாளர் நல்லமுத்துக்குமார் இருக்கும் இடம் தெரிந்துவிட்டது.

ஆந்திராவில் உள்ள புட்டபர்த்தியில் உள்ள அவரிடம் பொன்னேரி டி.எஸ்.பி. தொலைபேசியில் பேசினார்.


அப்போது அவர், நான் அசினிடம் பணம் கேட்டது உண்மைதான். அவர் மீது எந்த குற்றமும் இல்லை என்று தெரிவித்தார்.


மேலும் தமிழ்நாடு வந்து நேரில் போலீசில் சரணடைவதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.


நடிகை அசின் உதவியாளர் நல்லமுத்துக்குமார் காணாமல் போய்விட்டதாக அவரது தாயார் சுடலைவடிவு சென்னை செங்குன்றம் போலீஸில் புகார் செய்தார்.


இதையடுத்து போலீசார் அசினை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, நல்லமுத்துக்குமார் வேலையை விட்டுச்சென்று இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது.


இப்போது எங்கேயோ தலைமறைவாக இருந்துகொண்டு என்னிடம் 15லட்சம் பணம் பறிக்க நாடகமாடுகிறார் என்று தெரிவித்தார்.


இந்நிலையில் சுடலை வடிவு என் மகனுக்கு அசின் குடும்பத்து ரகசியங்கள் தெரியும். அதனால்தான் அவனை எங்கேயோ கடத்தி வைத்திருக்கிறார்கள்.


அவனை எப்படியாவது மீட்டுத்தாருங்கள் என்று செங்குன்றம் சோழவரம் போலீஸில் மீண்டும் புகார் செய்தார்.இதையடுத்து சோழவரம் போலீஸ், இச்சம்பவம் தொடர்பாக தனிப்படை ஒன்று அமைத்தது.


இந்த தனிப்படை மும்பை சென்று நல்லமுத்துக்குமார் எங்கே என்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அங்கு நடந்த விசாரணையிலும், லண்டனில் இருந்த அசினிடம் தொலைபேசியில் விசாரணை செய்த போதும் நல்லமுத்துக்குமார் ஆந்திராவில் இருப்பதாக வந்த தகவலை அடுத்து தனிப்படை போலீஸ் ஆந்திரா விரைந்தது.

போலீசார் செல்போன் டவர் வைத்து சோதனை செய்தபோது சென்னையில் இருந்து நல்லமுத்துக்குமார் போனில் பேசி இருப்பது தெரிய வந்தது. மேலும் சென்னையில் இருந்து நேராக நல்லமுத்துக்குமார் திருப்பதி சென்று உள்ளதும் மும்பையில் இருந்து அவரது நண்பர்கள் நேரடியாக திருப்பதிக்கு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.


தீவிரத்தேடுதலில் அவர் ஆந்திராவில் உள்ள புட்டபர்த்தியில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

நடிகை அசின் மீது எந்த குற்றமும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment