அரசி டிவி சீரியல் படப்பிடிப்பின்போது நடிகை ராதிகாவுக்கு தலையில் அடிபட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ராதிகாவின் ரேடான் நிறுவனம் தயாரித்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் அரசி. இந்த சீரியலின் சில காட்சிகள் தற்போது சென்னை கலங்கரை விளக்கப் பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது.
கலங்கரை விளக்க கட்டட படிக்கட்டு வழியாக ராதிகா வேகமாக ஏறி ஓடுவது போல காட்சியைப் படமாக்கினர். அப்போது திடீரென ராதிகா நிலை தடுமாறி சுவரில் மோதி விட்டார்.இதில் அவரது தலையிலிருந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ராதிகாவை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.அங்கு ஸ்கேன் எடுத்துப் பார்க்கப்பட்டது. பின்னர் டிஸ்சார்ஜ் ஆகி ராதிகா வீடு திரும்பினார். தலையில் அடிபட்டுள்ளதால் ராதிகா சில நாட்களுக்கு படப்பிடிப்பில் கலந்து கொள்ளமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment