பிபிஜி என்டர்பிரைசஸ் தயாரித்துள்ள படம் வைகை. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் நேற்று இரவு நடந்தது.
ஏகப்பட் நட்சத்திரங்கள் விழாவில் கலந்து கொண்டனர். நமீதாவும் பங்கேற்றார். நமீதா வரும் வரை எல்லாம் நல்லாதான் போய்க் கொண்டிருந்தது.
ஆனால் உடலை இறுக்க ஒட்டிய டைட்டான டாப்ஸ் மற்றும் துப்பட்டாவில் நமீதா அரங்குக்குள் என்டர் ஆனவுடன், அந்த ஏரியாவே சூடாகிப் போனது.
கவர்ச்சிகரமாக வந்த நமீதா, ரத்தினச் சுருக்கமாக நிகழ்ச்சியில் பேசினார். ஆடியோவையும் வெளியிட்டார்.
ராமநாராயணன், சிவசக்தி பாண்டியன், அழகன் தமிழ்மணி, விஜயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தப் படத்தின் நாயகன் பாலா. இவர் கலைஞர் டிவியில் இடம் பெற்ற மானாட மயிலாட நிகழ்ச்சியின் 2வது சீசனின் வெற்றியாளர் ஆவர். அவருக்கு ஜோடி போட்டுள்ளார் கேரளாவைச் சேர்ந்த விசாகா.
சுந்தரபாண்டி இயக்கியுள்ளார் - இவருக்கு இது முதல் படம். சபேஷ் முரளி இசையமைத்துள்ளனர்.
மதுரையில் நடந்த உண்மைச் சம்பவங்களின் தொகுப்பாம் வைகை படத்தின் கதை. சுப்ரமணியபுரம் படத்திற்குப் பிறகு இப்படத்தில் கஞ்சா கருப்பு முக்கிய வேடத்தில் நடித்துள்ளாராம்
No comments:
Post a Comment