மூன்றாவது முறையாக இங்கிலாந்து மகளிர் அணி உலகக் கோப்பை வென்றுள்ளது. ஆட்ட நாயகியாக இங்கிலாது வீராங்கனை என்.ஜே.ஷாவும், தொடரின் சிறந்த வீராங்கனையாக இங்கிலாந்தின் எஸ்.சி. டெய்லரும் தேர்வு செய்யப்பட்டனர்.

பூவாதலையா வென்ற நியூஸீலாந்து மகளிர் அணி முதலில் பேட் செய்தனர். விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்து வந்த நியூஸீ. வீராங்கனைகள் 29-வது ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் என்று சரிந்தனர்.
அதன் பிறகு தூலன் என்ற வீராங்கனையும் பிரவுன் என்பவரும் இணைந்து 63 ரன்களை ஆமை வேகத்தில் சேர்த்தனர். கடைசியில் தூலன் 48 ரன்களில் ஆட்டமிழக்க நியூஸீலாந்து மகளிர் அணி 47. 2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இங்கிலாந்து அணியில் ஆட்ட நாயகி என்.ஜே.ஷா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இங்கிலாந்து களமிறங்கி துவக்க வீராங்கனைகள் எஸ்.ஜே.டெய்லர் (39), அட்கின்ஸ் (40) ஆகியோர் மூலம் 74 ரன்கள் என்ற அபார துவக்கத்தை பெற்றது. அதன் பிறகு இறுதியில் 3 விக்கெட்டுகள் மளமள்வென சரிந்தாலும் என்.ஜே.ஷாவின் (17) நிதான ஆட்டத்தினால் வெற்றி பெற்று உலகக் கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து மகளிர் அணி.
No comments:
Post a Comment