கேரளாவில் உள்ள புகழ்பெற்ற கோயிலான செட்டிகுளக்கரை தேவி கோயிலுக்கு நடிகை நயன்தாரா தனது எடைக்கு எடை நேந்திரம் பழம் தந்து சாமி கும்பிட்டார்.
ஆலப்புழை மாவட்டம் மாவோலிக்கரை அருகில் உள்ளது இந்த புகழ்பெற்ற கோயில். இங்கு நேர்த்திக் கடனாக எடைக்கு எடை பொருள் காணிக்கை செலுத்துவது மிகப் பிரபலமான ஒன்று. வெல்லம், சர்க்கரை, உணவு தானியங்கள் போன்றவை காணிக்கையாகத் தரப்படுவது வழக்கம்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 11 மணிக்கு இந்தக் கோயிலுக்கு வந்த நயன்தாரா, அங்குள்ள துலாபாரத்தில் ஏறி அமர்ந்தார். ஒரு பக்கம் அவர் உட்கார, அரது எடைக்கு எடை நேந்திரம் பழம் தட்டில் வைக்கப்பட்டது. இது இங்கு மிக உயர்ந்த காணிக்கையாகக் கருதப்படுகிறது.
பின்னர் அங்கேயே பிற்பகல் வரை தங்கியிருந்தார். அவருக்கு கஞ்சி பிரசாதம் மதிய உணவாக வழங்கப்பட்டது. பின்னர் பிற்பகல் தரிசனம் முடித்துக் கொண்டு வீடு திரும்பினார்.
ஆதவன் படப்பிடிப்பிலிருந்து இரு தினங்கள் விடுப்பில் சொந்த ஊர் சென்ற நயன், தனது நீண்ட நாள் வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பகவதி அம்மனுக்கு என்னுடைய நன்றிக் கடனைச் செலுத்த வந்தேன். ஏற்கெனவே ஒருமுறை இப்படி துலாபாரம் தந்துள்ளேன். இப்போதுதான் மனதுக்கு நிறைவாக இருக்கிறது எனறார்.
No comments:
Post a Comment