Please Visite here - www.cenimagallary.blogspot.com

Monday, March 2, 2009

ஃபிலிம்ஃபேர் விருது - 2009: வாசலில் காக்க வைக்கப்பட்ட ‘ஸ்லம்டாக்’ குழந்தைகள்!


மும்பை: எட்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கிக் குவித்தது ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படம்.

இந்தத் திரைப்படத்தில் நடித்த மும்பை தாராவி குடிசைப் பகுதி குழந்தைகளை ஆஸ்கர் விருதுக்குழு அழைத்து, ஆஸ்கர் விழாவில் கலந்துகொள்ள வைத்து கெளரவப்படுத்தியது. ஆனால், இந்தியாவிலோ தலைகீழாகி விட்டது.

சனிக்கிழமை மாலை மும்பையில் நடந்த ஃபிலிம்ஃபேர்- 2009 விழாவிற்கு வந்திருந்த ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ திரைப்படக் குழந்தைகள் அனுமதி கிடைக்காமல் வெளியே 2 மணி நேரம் காத்துக்கிடந்த கொடுமை நிகழ்ந்தது.

தங்களுடைய ஆதர்ச நாயகர்களைக் காண ஆவலோடு வந்த அவர்கள் முகத்தில் ஏமாற்றம் மிஞ்சியது.

விழாவில் பங்கேற்க அவர்களுக்கு அழைப்பு இல்லை என்கிற ஒரே காரணத்திற்காக, பாதுகாவலர்கள் அக்குழந்தைகளை வாசலிலேயே நிற்க வைத்துவிட்டனர். ‘உங்களை உள்ளே அனுப்ப முடியாது’ என்று கடுமையாகவும் கூறியுள்ளனர். விழாவுக்கு வந்த பாலிவுட் பிரமுகர்களும் அந்தக் குழந்தைகளைக் கண்டு கொள்ளவில்லை.



சுமார் 2 மணிநேர காத்திருப்புக்குப் பின்னரே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.



‘ஜோதா அக்பர்’ திரைப்படத்தில் நடித்த ஹிருத்திக் ரோஷன் சிறந்த நடிகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ‘பேஷன்’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய பிரியங்கா சோப்ரா சிறந்த நடிகையாகத் தேர்தெடுக்கப்பட்டார்.



‘கஜினி’ திரைப்படம் மூலம் இந்தித் திரையுலகத்துக்கு அறிமுகமான அசினுக்கு சிறந்த புதுமுக நடிகை என விருது தரப்பட்டது. ‘ஜானே து யா ஜானே நா’ திரைப்படத்துக்காக ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது வழங்கப்பட்டது.



No comments:

Post a Comment