விஜய் அடுத்து நடிக்கவுள்ள வேட்டைக்காரன் படத்தின் ஷூட்டிங் ஆந்திராவின் ராஜ முந்திரியில் தொடங்கியுள்ளது.விஜய் நடித்து கடைசியாக வெளியான மூன்று படங்களுமே அவருக்கும், அவரது ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளன. அழகிய தமிழ்மகன், குருவி, வில்லு ஆகியவை ரசிகர்களை பெரிதும் ஏமாற்றி விட்டதால், வேட்டைக்காரனை செமத்தியான விருந்தாக கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார் விஜய்.பாக்ஸ் ஆபிஸ் ராஜாக்களில் ஒருவர் என திரையுலக வட்டாரத்தில் வர்ணிக்கப்படும் தனது பெயரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார் விஜய்.இந்த நிலையில்தான் வேட்டைக்காரன் படத்தைத் தொடங்கியுள்ளார்.
இப்படத்தை ஏவி.எம். புரடக்ஷன்ஸ் நிறுவனத்திற்காக எம்.பாலசுப்ரமணியம், பி.குருநாத் மெய்யப்பன் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடி போடுபவர் அனுஷ்கா. ரெண்டு படத்திற்குப் பிறகு தமிழை விட்டு விட்டுப் போன அனுஷ்கா, விஜய் படத்தின் மூலம் திரும்பி வருகிறார்.படத்தில் வில்லனாக நடிக்கவிருப்பவர் சலீம் கோஷ். ஸ்ரீஹரி, ஷாயாஜி ஷிண்டே, சத்யன் ஆகியோரும் படத்தில் உள்ளனர்.இயக்குநர் தரணியின் உதவியாளறான பாபு சிவன் இயக்குகிறார். கோபிநாத் கேமராவைக் கையாளுகிறார்.
விஜய் ஆண்டனி இப்படத்திற்கு இசையமைக்கிறார். விஜய் கெஸ்ட் ரோலில் வந்து போன சுக்கிரன் படத்தின் மூலம் இசையமைப்பாளரானவர் ஆண்டனி என்பது குறிப்பிடத்தக்கது. சண்டைக் காட்சிகளுக்கு கனல் கண்ணன்.மார்ச் 9ம் தேதி தொடங்கிய படப்பிடிப்பின்போது, விஜய்யும், ஜூனியர் கலைஞர்கள் 100 பேரும் பங்கேற்ற டைட்டில் பாடல் காட்சியை மிகப் பிரமாண்டமாக ராஜமுந்திரியில் வைத்து சுட்டுள்ளனர்.
படத்தில் மொத்தம் ஆறு பாடல்ளாம். இவற்றில் 3 பாடல் காட்சிகளை நியூசிலாந்தின் அழகிய லொகேஷன்களில் வைத்து சுடச் சுட சுடவுள்ளனர்.சூப்பர் ஸ்டாருக்கு வேலைக்காரன் - விஜய்க்கு வேட்டைக்காரன் என்று சொல்லும்படியாக படத்தை எடுங்க...
No comments:
Post a Comment