நடிகர் ஸ்ரீகாந்த் - வந்தனா தம்பதியினருக்கு சனிக்கிழமை அழகான ஆண் குழந்தை பிறந்தது.
ரோஜா கூட்டம் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமான ஸ்ரீகாந்த், பார்த்திபன் கனவு, ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம் என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்து வெற்றிப்பெற்ற பூ திரைப்படத்திலும் அவர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
காதல் மணம் புரிந்த ஸ்ரீகாந்த் - வந்தனா தம்பதியினர் பல்வேறு தடைகளுக்குப் பிறகு வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தனர். ஸ்ரீகாந்துக்கு மகன் பிறந்ததில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், ஸ்ரீகாந்துக்கும் அன்றுதான் பிறந்தநாள். அவருடையப் பிறந்த நாளிலேயே மகன் பிறந்ததில் மட்டற்ற மகிழ்ச்சியில் ஸ்ரீகாந்த தம்பதியினர் உள்ளனர்.
அடுத்த ஆண்டு அப்பாவும் பிள்ளையும் ஒன்றாக கேக் வெட்டுவார்கள். கொடுத்துவைத்த அப்பா, மகன் இல்லை?
No comments:
Post a Comment