லாஜிக் இல்லாத பல உட்டாலக்கடி மாயாஜால ஆங்கில படங்களை அதனுடய பரபரப்பான திரைக்கதைகாக பார்பவரா..? கிராபிக்ஸ் அட்டகாசத்துக்காக பார்பவரா..? அப்படியென்றால் இதோ உங்களுக்காக.. ஒரு அட்டகாசமான படம் “அருந்ததீ”
ராஜ குடும்பத்தின் ஓரே பெண் வாரிசான அருந்ததிக்கு அவளுடய காதலனுக்கும் திருமணம் நிச்சயிக்க படுகிறது. திருமணத்துக்கு முன்னால் தங்களுடய பாரம்பரிய அரண்மனைக்கு வருகிறாள். அங்கு சில நாட்கள் தங்கி இருந்துவிட்டு போக இருக்கும் போது, அங்கே அவளைபோலவே உருவம் கொண்ட அவளது பாட்டியின் உருவ படத்தை பார்த்து அவளை பற்றி கேட்கிறாள். அதே சமயத்தில் அந்த கோட்டையின் அருகில் உள்ள ஒரு பாழடைந்த கோட்டையில் உள்ள ஒரு கெட்ட சக்தி அவளை அடைய நினைக்கிறது. மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் ஜெக்கம்மா என்கிற அருந்ததியினால் கொல்லப்பட்ட அவளது மாமன் பசுபதியின் ஆவீ, தற்போது இருக்கும் அருந்த்தி பழைய அருந்ததியின் மறுபிறவி என்பதால் பூர்வ ஜென்மத்தில் அடைய முடியாதவளை, பசுபதி அரூப ரூபத்தில் அடைய துடிக்கிறான். இதையெல்லாம் படிக்கும் போது, ஏதோ அம்புலிமாமா கதை போல் இருந்தாலும், படம் ஆரம்பித்ததும் நம்மை கட்டி போட்டு விடுகிறார்கள், அந்த அளவுக்கும் இறுக்கமான திரைக்கதை, ஒளிப்பதிவு, கிராபிக்ஸ் என்று போட்டி போட்டு பின்னி எடுக்கிறார்கள்.
அருந்ததியாய் அனுஷ்கா இரட்டை வேடங்களில், மழையிலும், வெளிநாட்டு கடலோரங்களீலும், ஹீரோக்களுடன் உருண்டு புரண்டவரா..? சும்மா அசத்தியிருக்கிறார். அதிலும் அவரது உயரமே பழைய அருந்ததிக்கு “ஜெக்கம்மா” என்று மக்களால் கடவுளை போல வழிபடும் அந்த கேரக்டருக்கு ஒரு கெத்தை கொடுத்திருக்கிறது. சோனு சூட்.. மாமன் பசுபதியாய்.. அவருடய நடிப்பு படத்திக்கு மிகப்பெரிய பலம்.. சரியான வில்லன். அதே போல் முஸ்லிம் மந்திரவாதியாய் வரும் ஷாயாஜி ஷிண்டே.. சரியான தேர்வு.. அவரும் அவருடய பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். இம்மாதிரியான படங்களில் எல்லாம் என்னத்தை நடிக்க இருக்கிறது என்பதை, மோசமான நடிப்பு, மற்றும் திரைக்கதை, டெக்னிகல் அம்சங்கள் உள்ள படஙக்ளை பார்த்தால் புரியும். முதல் பாதியில் திரைக்கதை பேய் வேகம்.. பழைய அருந்ததியின் கதையை ஒரேயடியாய் சொல்லாமல், பிரித்து, பிரித்து, படம் முழுவதும் வருவது போல் சொல்லி, படத்தின் வேகத்தை கூட்டியிருப்பது நல்ல உத்தி. என்ன க்ளைமாக்ஸை இன்னும் கொஞ்சம் யோசித்திருந்தால் பிரமாதபடுத்தியிருக்கலாம். கோட்டியின் இசையில் ஆங்காங்கே பழைய இளையராஜாவின் பாடல்கள் தெரிகிறது. அதிலும் ஒரு பாடலில் பெண் குரலில் “ராஜதீபமே” பாடல். அனுஷ்கா ஆடும் ஒரு டிரம் டான்ஸ் எங்கயோ ஒரு ஜாப்பானோ, சைனீஸ் படத்திலோ பார்த்த மாதிரியிருக்கிறது.. இருந்தாலும் ரொம்ப புவர்.
டிஸ்கி: இது டப்பிங் விமர்சனம்.
No comments:
Post a Comment