ஆர்யா ஜோடியாக ஸ்ரேயா நடிக்கும் படத்துக்கு சிக்கு புக்கு என்று பெயர் வைத்துள்ளனர்.
ஜக்குபாய், கந்தசாமி என வரிசையாக படங்களை முடித்துவிட்டு திரும்பிப் பார்த்தால், ஸ்ரேயாவுக்கு தமிழில் படங்களே இல்லை!
விஷாலுடன் முன்பே ஒப்புக் கொண்ட சத்யமும் பாதி முடியும் நிலையில் உள்ளது.
'அடடா தமிழ் கூறும் நல்லுலகம் ஒரேயடியாக மறந்துவிட்டால் என்ன செய்வது?' என்ற கவலை வந்துவிட்டதோ என்னமோ... இப்போது கொஞ்சம் சுமாரான படங்களுக்கும் தலையாட்டுகிறாராம்.
ஆர்யாவுக்கு ஜோடியாக 'ஜிக்கு புக்கு' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஸ்ரேயா.
தனுஷுடன் குட்டி எனும் படத்திலும் நடிப்பார் என்று தெரிகிறது. இந்த இரண்டிலுமே கவர்ச்சி ப்ளஸ் தாராள கவர்ச்சிக்கு உத்தரவாதமிருக்கிறதாம்.
இதுகுறித்து ஸ்ரேயா இப்படிச் சொல்கிறார்:
இப்போது தமிழில் இரண்டு புதுப் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளேன். இரண்டு படங்களிலுமே நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம். இனிவரும் படங்களில் கவர்ச்சியும், நடிப்பும் கலந்த கலவையாக பார்க்கலாம்.
தமிழில் எனது படம் வெளியாகி சுமார் ஒரு வருடம் ஆகிறது.
ஆனாலும் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஒரு சில படத்தின் படப்பிடிப்பு வருடக்கணக்கில் ஆகிவிட்டதால் எனது படம் ரிலீஸாகாதது போன்ற தோற்றம் உள்ளது. இந்த ஆண்டு இடைவெளி இல்லாமல் நான் நடித்த படங்கள் ரிலீஸ் ஆகும், எனகிறார் ஸ்ரேயா.
எல்லாம் சரி, சுத்தத் தமிழில் பெயர் வைத்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது அந்த திட்டத்தை அரசு பரிசீலனை செய்யப் போகிறது என்றவுடன் சிக்கு புக்கு என மாற ஆரம்பித்து விட்டார்களோ..??
No comments:
Post a Comment