தென்காசி அருகே நடந்த முரட்டுகாளை பட ஷூட்டிங்கில் சுந்தர் சி காயமடைந்தார்.
ரஜினி நடித்து 28 ஆண்டுகளுக்கு முன் வெளியான மெகா ஹிட் படமான ‘முரட்டுக்காளை’ படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார் சுந்தர்.சி.
அவருக்கு ஜோடியாக சினேகா, சிந்து துலானி நடிக்கின்றனர். இந்தப்படத்தை செல்வபாரதி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு தென்காசி பகுதியில் கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது.
தென்காசி அருகே சுந்தரபாண்டியபுரத்தில் இப்படத்தி்ன் ஷூட்டிங் கடந்த மூன்று நாட்களாக நடந்து வருகிறது. ரேக்ளர் ரேஸ் காட்சிகள் ஷூட் செய்யப்பட்டன.
நேற்று சுந்தரபாண்டியபுரத்தில் மாட்டு வண்டிகள் வேகமாக செல்லும் காட்சிகள் படமாக்கப்பட்டபோது எதிர்பாரவிதமாக நடிகர் சுந்தர் சி சென்ற மாட்டுவண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. கைகளிலும் சிராய்ப்பு ஏற்பட்டது.
உடனே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, தென்காசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுந்தர் சி சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் குற்றாலத்தில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருக்கும் சுந்தர்.சி. அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது முரட்டுக்காளை குறித்து அவர் கூறுகையில்,
முரட்டுகாளை ஷூட்டிங் சுந்தரபாண்டியபுரத்தில் நடந்தது. கடந்த இரண்டு நாட்களாக நான் ஒட்டிச் சென்ற மாட்டுவண்டியில் பூட்டப்பட்ட மாடுகள் நேற்று ஓட்டி சென்ற வண்டியில் இல்லை. வேறு மாடுகள் பூட்டப்பட்டிருந்தன.
வண்டியை வேகமாக ஓட்டிச் சென்றபோது மாடுகள் வேகமாக வண்டியை இழுத்து சென்றன. தெருவி்ல் திரும்பும்போது மாடுகள் முரண்டு பிடித்து ஓடியதால் எதிர்பாரவிதமாக நான் சென்ற வண்டி கவிழ்ந்தது. இதில் எனக்கு கை, கால்களில் அடிபட்டது.
இதுகுறித்த தகவலை எனது மனைவி குஷ்புவுக்கு தெரிய படுத்தினேன். அவர் குற்றாலத்திற்கு வருகிறார். இன்று ஷூட்டிங்கில் கலந்து கொள்வேன்.
சினிமா ஷூட்டிற்கு ஏற்ற இயற்கை எழில் சூழ்ந்த இடமாக நெல்லை மாவட்டம் திகழ்கிறது. இதனால் நான் பல படங்களை இம்மாவட்டத்தில் ஷூட் செய்துள்ளேன்.
இங்குள்ள மக்கள் எங்களுக்கு மிகவும் ஓத்துழைப்பு அளிக்கின்றனர். பொள்ளாச்சியை விட நெல்லை மாவட்டத்தில் லொக்கேசன் சிறப்பாக இருக்கிறது.
எனது சொந்த தயாரிப்பான ஐந்தாம்படை படம் இம்மாதம் ரிலீஸ் ஆகிறது என்றார் சுந்தர்.சி.
கலைஞர் தொலைக்காட்சி தயாரிக்கும் முரட்டுக்காளை படப்பிடிப்பு விரைவில் முடிவடையவிருக்கிறது.
No comments:
Post a Comment