Please Visite here - www.cenimagallary.blogspot.com

Saturday, March 14, 2009

'ஹீரோவா... வேணாம்பா'!!

என்னைப் பார்க்கிற பத்திரிகைக்காரங்களும் சரி, நண்பர்களும் சரி... அடுத்து ஹீரோவா எப்ப நடிக்கப் போறேன்னுதான் கேக்கறாங்க. அவங்களுக்கு என்னோட ஒரே பதில்... வேணவே வேணாம்பா, என்பதுதான்.

என்னோட களம்... நான் விளையாட வசதியான மைதானம் படம் இயக்குதல்தான். இதில் நான் ரொம்ப வசதியாக உணர்கிறேன்', என்கிறார் இயக்குநர் வி்ஷ்ணுவர்தன்.

சர்வம் படத்தை முழுமையாக முடித்துவிட்டு, இம்மாத இறுதியில் ரிலீஸ் செய்யக் காத்திருக்கும் விஷ்ணு, செய்தியாளர்களைச் சந்தித்தார் அவரது அலுவலகத்தில்.

பில்லா என்ற பெரிய படம் கொடுத்துவிட்டு, மீண்டும் நட்சத்திர அந்தஸ்து இல்லாத மாதிரி ஒரு படம் தரக் காரணம் என்ன...

நட்சத்திரங்களை மட்டும் நம்பும் ஆள் நானல்ல. எனக்கு கதை முக்கியம். அது யாரைக் கேட்கிறதோ அவர்களைத் தேடி நான் போவேன். அவ்வளவுதான். அடுத்த கதைக்கு என் தம்பி கிரு்ணா பொருத்தமாக இருந்தால் கிருஷ்ணாவிடம் காலஷீட் கேட்பேன். ரஜினி சார் மாதிரி பெரிய நடிகர்கள்தான் அதற்கு தேவை என்றால் அவர்களைத் தேடியும் போவேன்.

சர்வம் என்ன மாதிரி படம்?

நிறைய பேர் பில்லா மாதிரி ஸ்டைலிஷ் படமா... அறிந்தும் அறியாமலும் மாதிரி படமா என்றெல்லாம் கேட்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. இது ஒரு புதிய படம். புதிய வண்ணத்தில், புதிய உணர்வுகளைத் தரும் பிரெஷ்ஷான படம்.

ஆர்யா-த்ரிஷாவுக்கு மிக நெருக்கமான காட்சிகள் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கர்ளே...?

ஒரு பையனும் பொண்ணும் புதுசா காதலிச்சா எப்படி இருக்கும்... அவங்களுக்குள்ள எப்படியெல்லாம் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும்... அதை ஆன்ஸ்கிரீன்ல ஆர்யா-த்ரிஷா ஜோடிகிட்ட பார்க்கலாம்.

அடுத்த படம்...?

இன்னும் திட்டமிடவில்லை என்பதே உண்மை. சர்வம் ரிலீஸ் ஆகட்டும். ஒரு நான்கு மாதம் கழித்து சொல்கிறேன். ஹீரோ என் தம்பி கிருஷ்ணாவாகவும் இருக்கலாம்... வேறு பெரிய நடிகராகவும் இருக்கலாம்.

நீங்களே ஹீரோவாக நடிக்கலாமே...?

இந்தக் கேள்விக்கான பதில்தான் முதல் பாராவில் நீங்கள் படித்தது!!

No comments:

Post a Comment