Please Visite here - www.cenimagallary.blogspot.com

Saturday, March 14, 2009

உலகின் மிகப்பணக்கார நகரங்கள்!!!


உங்களால் உலகின் பணக்கார நகரங்கள் எவை என்று சொல்ல முடியுமா? நாம் நினைப்பதற்கும் உண்மையில் பட்டியலில் உள்ளவைக்கும் எவ்வளவு வித்தியாசம் என்று பாருங்கள்! உலகின் மிக காஸ்ட்லியான நகரங்கள் என்று ஒவ்வொரு வருடமும் வெளியிடுகிறார்கள்..

அதைப்பார்த்தால் நமக்கு ஆச்சரியமாக இருக்கும். நாம் நினைத்தது போல் இருக்கிறதா என்று பார்ப்போம்!

1.முதலிடத்தில் இருப்பது மாஸ்கோ! மிகச் செலவாகும் காஸ்ட்லி நகரம் மாஸ்கோ !ஒரு காலத்தில் கம்யூனிஸ நகரமான இது தற்போது பணக்கார நகரம்! 100 க்கு மார்க், நியூயார்க்கை வைத்து அளந்தால் மாஸ்கோ இண்டெக்ஸ் 142.4!!

மூன்றாவது முறையாக தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது இந்த முன்னாள் கம்யூனிச நகரம்.

அதன் அழகான சர்ச் படத்தைப்பாருங்கள்!!! என்ன அழகு!

2.டோக்கியோ! 2ம் இடத்தில் உள்ளது! ஆசியாவில் முதல் இடம் வகிக்கிறது டோக்கியோ.. இதன் மதிப்பெண் 127.

இரவில் டோக்கியோ! போன வருடத்தைவிட இரண்டு நிலை முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய, அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியும் இதற்கு ஒரு காரணம்!

3.லண்டன் லண்டன் ஐரோப்பாவின் 2 வது பணக்கார நகரமாகும்!! முதல் இரண்டு பணக்கார நகரங்களும் ஐரோப்பாவிலேயே உள்ளன..

லண்டன் சிடி ஹாலின் எழில்மிகு தோற்றம்!!

பெரும்பான்மையானவர்கள் வசிக்க ஆசைப்படும் இடங்களில் ஒன்று லண்டன்!!! மிக அழகிய நகரம்.

4.ஆஸ்லோ

பலமுறை தீக்கு இரையாக்கப்பட்ட நகரம் நார்வேயின் தலைநகரான ஆஸ்லோ.

இலங்கைக்கும் புலிகளுக்கும் இடையில் அமைதிப்பேச்சுவார்த்தை நார்வே தலையீட்டில் பல வருடங்கள் நடந்தது நினைவில் இருக்கும்..

ஆஸ்லோ உலக அமைதியின் சின்னமாக ஐரோப்பாவின் மணிமகுடமாக விளங்குகிறது..

5.சியோல்

சியோல் தென்கொரியாவின் தலைநகரம்!! தொழில் புரட்சியில் உயர்ந்த நாடு..உலகின் மக்கள்தொகை அதிகமுள்ள நகரங்களில் இதுவும் ஒன்று. தென் கொரிய டி.வி. எலக்ட்ரானிக்ஸ்தான் நாம் அதிகம் உபயோகிப்பது.

6.ஹாங்காங்!

ஹாங்காங் நீண்ட காலம் பிரிட்டனின் குத்தகையில் இருந்த்து.. தற்போது சீனாவுடன் இணந்துள்ளது. ஹாங்காங் சிங்கப்பூர் போல பரபரப்பான வர்த்தக நகரம்..நம்ம ஊர் ”குருவி” ஒருத்தர்”சார் சோனி எல்.சி.டி.டி.வி வேணுமா? ஹாங்காங்க் ரெகுலரா போய் வருகிறோம் என்றார்.

7.கோபன்ஹேகன்

கோபென்ஹேகன் டென்மார்க் தலைநகரம்!! அழகு கொழிக்கும் நகரங்களில் ஒன்று இது! ஒரு முறை போய் வரலாமா?

8.ஜெனிவா

ஜெனீவா நான் சொல்லவேண்டியதில்லை!! சுவிஸ் நாட்டின் இரண்டாவது பெரிய நகரம். ஐக்கிய நாடுகள்,செஞ்சிலுவை சங்க தலைமையகங்கள் உள்ள நகரம்!! ”சுவிஸ் ஹேமா”தான் நிறைய சொல்லனும்!

9.ஸுரிச்

10.மிலன்

22.நியூயார்க்

48.மும்பை

52.துபாய்

55.லாஸ் ஏஞ்செல்ஸ்

75.மியாமி

107.வாஷிங்டன் டி.சி.

மேலேயுல்ல பட்டியலில் அமெரிக்க நகரங்களையும் மும்பையயும் பாருங்கள்!!

உண்மையில் பொருளாதார வீழ்ச்சி அமெரிக்க நகரங்களை பாதித்து விட்டதுபோல் தெரிகிறது!!

நம்ம எண்ணியதற்கும் பட்டியலுக்கும் வித்தியாசம் உள்ளது அல்லவா?

No comments:

Post a Comment