Please Visite here - www.cenimagallary.blogspot.com

Thursday, March 26, 2009

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு



இந்தியாவில் நடப்பதாக இருந்த ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாதுகாப்பு பிரச்சினை காரணமாக தென்ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது. அங்கு அடுத்த மாதம் 18 ந் தேதி தொடங்கி மே மாதம் 24 ந்தேதி வரை போட்டி நடைபெறுகிறது.

இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. 8 நகரங்களில் போட்டி நடத்தப்படுகிறது. மொத்தம் 59 போட்டிகள் நடைபெறுகின்றன. மே 22 மற்றும் 23 ந் தேதிகளில் அரை இறுதி போட்டிகளும் 24 ந்தேதி ஜோகன்ஸ் பர்க் நகரில் இறுதி போட்டியும் நடைபெறும்.

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி டேர்டேவில்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ஐதராபாத் டெக்கான் சார்சர்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 8 அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் 2 தடவை மோத வேண்டும். 14 போட்டிகளில் ஒவ்வொரு அணியும் ஆடும். இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி போட்டிக்கு வரும்.

கேப்டவுன், ஜோகன்ஸ்பர்க், டர்பன், பிரிடோரியா, கிழக்கு லண்டன், கிம்பெர்லி, பிளோம்பான்டின், போர்ட் எலிசபெத் ஆகிய 8 நகரங்களில் போட்டி நடக்கும்.

இதில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் டர்பன் நகரில் 16 போட்டிகள் நடத்தப்படுகின்றன. பிரிட்டோரியாவில் 12 போட்டிகளும், ஜோகன்ஸ்பர்க், கேப்டவுன் ஆகிய இடங்களில் தலா 8 போட்டிகளும் போர்ட் எலிசபெத், கிழக்கு லண்டன் ஆகிய இடங்களில் 4 போட்டிகளும், பிளோம்பான்டின், கிம்பெர்லி ஆகிய இடங்களில் தலா 2 போட்டிகளும் நடக்கின்றன.

பெரும்பாலான நாட்களில் தினமும் 2 போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு முதல் போட்டியும், இரவு 8 மணிக்கு 2 வது போட்டியும் நடக்கிறது.

18 ந்தேதி கேப்டவுன் நகரில் முதல் நாள் போட்டிகள் நடக்கிறது. இதில் 4 மணிக்கு நடக்கும் முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. அடுத்து 8 மணிக்கு நடக்கும் போடடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை அணிகள் மோதுகின்றன.

No comments:

Post a Comment