எந்திரன் படத்தில் நடிக்கும் ரஜினிக்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் குரல் கொடுக்கிறார். ஆச்சரியமாக இருக்கிறாதா? ஆனால், முற்றிலும் உண்மை.
சன் பிக்சர்ஸ் பெரும் பொருட் செலவில் எந்திரன் படத்தை தயாரித்து வருகிறது. ஷங்கர் படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய். படத்துக்கு இசை ஏ.ஆர். ரஹ்மான்.
இதன் ஓபனிங் பாடல் காட்சியை ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அரங்கு அமைத்து எடுத்து வருகிறார் ஷங்கர். ரஜினி, ஐஸ்வர்யா ராயுடன் ஆயிரம் துணை நடிகர்கள் இந்தப் பாடல் காட்சியில் பங்கு பெறுகின்றனர்.
சிவாஜி படத்தில் இடம்பெற்ற பூம்பாவாய்... பாடல் இங்குதான் அரங்கு அமைத்து எடுக்கப்பட்டது. அதைவிட பிரமாண்டமான அரங்கை எந்திரனுக்காக உருவாக்கியிருக்கிறார் கலை இயக்குனர் சாபு சிரில்.
இந்தப் பாடல் காட்சிக்கு மட்டும் மூன்று கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. (தமிழில் சூப்பர் ஹிட்டான சுப்பிரமணியபுரம், வெண்ணிலா கபடிகுழு படங்களின் பட்ஜெட் இதைவிட குறைவு).
இந்த ஓபனிங் பாடலை ஏ.ஆர். ரஹ்மானும், மதுஸ்ரீயும் இணைந்து பாடியுள்ளனர். ரஜினிக்கு ரஹ்மான் குரல், ஐஸ்வர்யாராய்க்கு மதுஸ்ரீயின் குரல். இரண்டு வாரங்கள் இங்கு படப்பிடிப்பு நடத்த திட்மிட்டுள்ளார் ஷங்கர்.
How is it?
No comments:
Post a Comment