தமிழ் திரையுலகின் செக்ஸ் பாம் நமீதா, தன் கலைச்சேவையை மலையாளக் கரையோரம் வரை நீட்டித்து, மலையாள மக்களுக்கும் திவ்விய தரிசனத்துக்கு வழி செய்திருக்கிறார்.
மலையாளத்தில் தயாராகும் பிளாக் ஸ்டாலியன் என்ற படத்தில் கலாபவன் மணியுடன் இணைந்து நடிக்கிறார் நமிதா. நமீதா நடிக்கும் முதல் மலையாளப் படம் இதுதான்.
படத்தை இயக்குகிறவர் பிரமோத் பப்பன். இதற்கு முன்பே நமீதாவின் பல தமிழ்ப் படங்கள் ஷகீலா பட ரேஞ்சுக்கு தலைப்புகளுடன் அங்கே வெளியாகியிருப்பதால் சேட்டன்கள் ஏகத்துக்கும் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கிறார்களாம் பிளாக் ஸ்டால்லியனுக்காக.
நமீதா தனது தோற்றத்தைப் போலவே தனக்கு வழங்கப்படும் சம்பளத்திலும் பிரும்மாண்டத்தை எதிர்பார்ப்பவர்.
மலையாளத்தில் இன்னமும் மம்முட்டி மோகன்லாலே ரூ. 1 கோடி சம்பளத்தைத் தாண்டவில்லை. இதில் ஹீரோயினுக்கு ஒரு சில லட்சங்கள் கொடுத்தாலே பெரிய விஷயம். ஆனால் நமீதா விஷயத்தில் அப்படி இருக்க முடியுமா... இவர்கள் தாராளம் காட்டினால்தானே... அவரும் பெரிய மனது வைப்பார்.
அந்த உண்மை புரிந்து இந்தப் படத்தில் கிட்டத்தட்ட தமிழில் தருவதற்கு இணையாக சம்பளம் கொடுத்துள்ளார்களாம் நமீதாவுக்கு.
ஒரு கூடுதல் தகவல்: இந்த ஆண்டு வருமான வரியாக ரூ.27 லட்சம் கட்டி வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு இனிய அதிர்ச்சி கொடுத்துள்ளாராம் நமீதா.
'மில்லனியர்' உலகத்தைக் கலக்கியது இந்த 'ஸ்டாலியன்' மலையாளத்தை உலுக்குமா?
No comments:
Post a Comment