இந்திய மக்களின் கனவுக் கார் நானோவுக்கு இன்று முதல் முன்பதிவு ஆரம்பமாகிறது.
பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் ரூ.70 ஆயிரம் செலுத்தி இந்த முன்பதிவை செய்து கொள்ள வேண்டும். டாடா மோட்டார்ஸ் ஷோரூம்களிலும் செய்து கொள்ளலாம்.
உலகிலேயே மிகவும் குறைந்த விலை கொண்ட பிராண்டட் கார் டாடாவின் நானோதான்.
ஒரு மோட்டார் சைக்கிளின் விலையை விட (புல்லட் விலை ரூ.1லட்சத்துக்கும் மேல்) குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ள இந்தக் காரை முன்பதிவு கூட்டம் பெருமளவு அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் எத்தனை லட்சம் பேர் முன்பதிவு செய்தாலும், இந்த ஆண்டு இறுதிவரை சுமார் 30 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் கார்கள வரைதான் சப்ளை செய்ய முடியும் என டாடா தனது உற்பத்தித் திறனை அறிவித்திருப்பது மக்களை யோசிக்க வைத்தாலும், ரூ.70 ஆயிரத்தைக் கட்ட ரொம்ப யோசிக்கமாட்டார்கள் என்றே நம்புகிறது டாடா.
அடுத்த மாதம் முதல்வாரம் மட்டுமே இந்தக் கார்கள் அனைத்து டாடா மோட்டார்ஸ் ஷோரூம்களிலும் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.
எப்படியிருந்தாலும், இன்று நானோ முன்பதிவு துவங்கும்போது, பங்குச் சந்தை சூடுபிடிக்கும் என நம்புகிறார்கள்.
15 நாளில் 10 லட்சம் நானோ முன்பதிவு - டாடா நம்பிக்கை
அகமதாபாத்: மார்ச் 23-ம் தேதியிலிகுந்து அடுத்த 15 தினங்களில் 10 லட்சம் நானோ கார்கள் முன்பதிவு செய்யப்படும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு பியட் யுனோ ரக கார்களுக்குத்தான் அதிக முன்பதிவு நடந்தது. 1995-96 ம் ஆண்டு இந்தக் கார் அறிமுகமானபோது, 15 நாட்களில் 2.90 லட்சம் பியட் கார்கள் விற்பனையானதுதான் அதிகபட்ச முன்பதிவு சாதனையாக இருந்தது.
அந்த சாதனையை நானோ இப்போது முறியடிக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.
மேலும் ஒரு நானோ முன்பதிவுக்கு ரூ.70 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. அப்படிப் பார்த்தால் 15 நாட்களில் ரூ.7000 கோடியை டாடா மோட்டார்ஸ் எளிதில் திரட்டிவிடும் என நம்பப்படுகிறது.
இவ்வளவு கார்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டாலும், மாதத்துக்கு 3000 நானோ கார்கள் மட்டுமே சப்ளை செய்யப்படும் என டாடா அறிவித்துள்ளது. அதாவது குலுக்கல் முறையில் வாடிக்கையாளர்கள் தேர்நெதெடுக்கப்பட்டு கார்களைத் தருவார்களாம்.
அகமதாபாத்துக்கு அருகே அமைந்துள்ள நானோ ஆலை முழுமையாக செயல்படத் துவங்கினால்தான் நிலைமை சீரடையுமாம். இந்த ஆலை ஆண்டுக்கு 250000 கார்களை உற்பத்தி செய்யும். வரும் ஜூன் மாதம் இந்த ஆலை செயல்படத் துவங்கும் என எதிர்பார்க்கிறார்கள்.
ஆக, இப்போ 'புக்' பண்ணாலும், நானோ கிடைக்க குறைந்தது ஒரு வருடமாவது ஆகும் எனத் தெரிகிறது.
கார் நானோவாக இருந்தாலும் காத்திருப்பு மெகாவாக இருக்கும் போலிருக்கே..
No comments:
Post a Comment