கன்னட திரைப்பட 75-வது ஆண்டு பவள விழா கொண்டாடப்பட்டு வருகிறது. முதல் நாள் விழாவில் கமல்கலந்துகொண்டார்.
2-வது நாள் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அவருக்கு விழா குழுவினர் சார்பில் மாலை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கன்னட ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் கன்னட மொழியிலேயே பேசினார். அப்போது அவர்,
’’கன்னட திரைப்பட பவள விழாவில் கலந்து கொண்டு பேசுவேன் என்று கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு நான் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை.
இந்த வாய்ப்பை எனக்கு அளித்த கடவுளுக்கு மனதார நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ் சினிமாவில் நாவல்களை அடிப்படையாகக் கொண்டு பல படங்கள் எடுக்கப்படுகின்றன. அந்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்று வருகின்றன.
ஆனால், கன்னடத்தில் நாவல்களை அடிப்படையாகக் கொண்டு படம் எடுக்க யாரும் முன்வருவதில்லை.
,
பசவண்ணவர், குவெம்பு போன்ற பல்வேறு இலக்கியவாதிகளின் நாவல்கள் நிறைய உள்ளன.
அந்த நாவல்களில் உள்ள பாத்திரங்களைக் கொண்டு படம் எடுக்க முன்வர வேண்டும். ரக்தராத்திரி என்று ஒரு நாவல் உள்ளது.
இந்த நாவலில் வரும் தளவாய் மாத்தண்ணா கதாபாத்திரத்தில் கன்னடத்தில் நடிக்க எனக்கு ஆசை. அதற்கான சந்தர்ப்பத்தை கடவுள் தான் எனக்கு கொடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment