Please Visite here - www.cenimagallary.blogspot.com

Monday, March 30, 2009

மறுபடியும் எனக்கு ஆஸ்கர் கிடைக்க 10 ஆண்டுகள் ஆகும்:ஏ.ஆர்.ரகுமான்


மும்பை குடிசை பகுதியை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட `ஸ்லம் டாக் மில்லினர்' படத்துக்கு இசையமைத்தவர், ஏ.ஆர்.ரகுமான். அந்த படத்தில் இடம்பெற்ற `ஜெய் ஹோ' பாடலுக்கு உள்பட 2 ஆஸ்கார் விருதுகள் அவருக்கு கிடைத்தன.


பிரபலமான அந்த பாடலை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துவதற்கான உரிமையை காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது.

நேற்று கேரள மாநிலம் கொச்சிக்கு வந்த ஏ.ஆர்.ரகுமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

ஜெய்ஹோ பாடலை காங்கிரஸ் கட்சி பிரசாரத்துக்கு பயன்படுத்துகிறதே?

(அந்த கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்க மறுத்த ரகுமான்)ஜெய் ஹோ பாடல் அனைவருக்கும் சொந்தமானது என்று

தெரிவித்தார்.


ஆஸ்கர் விருது வாங்கித்தந்த ஸ்லம்டக் பற்றி?


"எனக்கு கிடைத்த ஆஸ்கார் விருதுகள், இந்திய இசைக்கு அதிக மரியாதையையும், அங்கீகாரத்தையும் அளித்து
உள்ளது. இங்குள்ள இசையமைப்பாளர் ஒருவர் ஆஸ்கார் விருதை தட்டிச்சென்றது உலகம் முழுவதும் தெரியவந்துள்ளது.

இந்திய குடிசை பகுதி பற்றி அந்த படத்தில் சித்தரிக்கப்பட்டு உள்ளது போல், ஒவ்வொரு நாட்டிலும் `இருட்டுப்பகுதி'கள் உள்ளன. அவற்றை வெளிப்படுத்தும்போதுதான் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

ஆஸ்கர் விருதுக்கே பரிந்துரைக்கப்பட்டு விருதுகளையும் குவித்துவிட்டது. எத்தனை காலம் இப்படத்திற்காக உழைத்தீர்கள்?

பொதுவாக படங்களுக்கு இசையமைப்பதற்கு அதிக காலம் பிடிக்கும். ஆனால், உலகின் உயரிய சினிமா விருதை பெற்றுத்தந்த இந்த படத்திற்கு இசையமைப்பதற்காக நான் 3 வாரங்களை மட்டுமே எடுத்துக்கொண்டேன்.


இந்த படத்தின் ஒலிக்கலவைக்காக மற்றொரு ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியுடன் இணைந்து, ரூ.100 கோடி செலவில் தயாரிக்கப்படும் `புளூ' என்ற படத்தில் பணியாற்ற இருக்கிறேன். வாய்ப்பு, நேரம் கிடைப்பதை பொறுத்து மலையாளப்படங்களுக்கு இசையமைப்பது பற்றி முடிவு செய்வேன். வருங்காலத்தில் அதற்கான வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும்.


ஆஸ்கர் விருதுக்கு பிறகு சம்பளத்தை அதிகப்படுத்திவிட்டார்களா?

ஆஸ்கார் விருதுக்குப்பிறகு எனது சம்பளத்தை நான் கூட்டிக்கொள்ளவில்லை. மாறாக, பொருளாதார மந்த நிலை காரணமாக, சம்பளத்தில் 10 சதவீதம் குறைத்துக்கொள்ளும்படி என்னை கேட்டுக்கொண்டு உள்ளனர். மீண்டும் எனக்கு ஆஸ்கார் விருது கிடைக்கவேண்டும் என்றால் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம்.''

No comments:

Post a Comment