Please Visite here - www.cenimagallary.blogspot.com

Tuesday, March 3, 2009

பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணி மீது துப்பாக்கிச் சூடு - படங்களுடன்


பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணி மீது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு, துப்பாக்கிச் சூடு தாக்குதலில் வீரர்கள் சமரவீரா, சங்ககாரா, மெண்டிஸ், ஜெயவர்த்தனே உள்பட 7 பேர் படுகாயமடைந்தார். இலங்கை அணிக்கு பாதுகாப்புக்கு வந்த 5 போலீசார் பலியாயினர்.

பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்று வந்தது. லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து கொண்டுள்ளது. இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடக்க இருந்த நிலையில் ஸ்டெடியத்துக்கு வெளியே இலங்கை அணியினர் பஸ்சில் வந்து இறங்கியபோது தீவிரவாதிகள் திடீரென 4 கிரனைட் குண்டுகளை வீசினர். இதில் அந்த அணியில் நிலை குலைந்து ஓட ஆரம்பித்த நிலையில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

இதில் இலங்கை வீரர்கள் சமரவீரா, சங்ககரா, மெண்டிஸ், கேப்டன் ஜெயவர்த்தனே உள்பட 7 வீரர்கள் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலில் இலங்கை அணிக்கு பாதுகாப்புக்கு வந்த 5 போலீசார் பலியாயினர். இதையடுத்து கிரிக்கெட் பார்க்க வந்த ரசிகர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.

இந்தச் சம்பவத்தையடுத்து இலங்கை அணியின் சுற்றுப் பயணம் உடனடியாக ரத்து செய்யப்பட்டுவிட்டது.

தாக்குதலில் இலங்கை வீரர்கள் வந்த பஸ் பெருத்த சேதமடைந்தது. பஸ் முழுவதும் குண்டுகள் துளைத்துள்ளன. 12 தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது

இலங்கை அணியினர் வந்த பேருந்தை வழி மறுத்து திவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிகிறது.. இந்த தாக்குதலில் ராக்கெட் மற்றும் கை எரி குண்டுகள் பயன் படுத்தப்பட்டதாகவும் தெரிகிறது.




துப்பக்கிச்சுடு நடத்திய திவிரவாதிகளின் படம்













No comments:

Post a Comment