இணைய வழி பணம் பண்ண ஆயிரம் ஆயிரம் வழிகளை யோசித்து யோசித்து உருவாக்கி கொண்டேயிருக்கின்றார்கள்.
யூடியூப் (Youtube) எனும் வீடியோக்களை வழங்கும் தளம் பற்றி இணைய உலகில் தெரியாதோர் இருக்கமுடியாது.அதை அப்படியே ஈ அடிச்சான் காப்பியாக இங்கே ஒரு சுவாசரஸ்ய தளம் உருவாக்கி இருக்கிறார்கள்.அது மணிடியூப்.காம் (Moneytube.com)
இதில் அங்கம் வகிப்போர் பணம் பண்ணலாமாம். எப்படி?.இதில் மெம்பராகி பின், பிற வீடியோ தளங்களிலுள்ள (உதாரணமாக YouTube™, Google Videos™, Break™ etc) சூடான வீடியோக்களுக்கு சுட்டி கொடுக்க வேண்டும்.அந்த சுட்டி வழி வரும் டாலர்கள் வருவாயில் ஒரு குறிப்பிட்ட பகுதி உங்களுக்கு பகுத்து வழங்கப்படுமாம்.
மணி-டியுப் இதுதான் அந்த தளம் சென்று பாருங்கள்.ஆனால் தற்போது அந்தத்தளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.இந்தவருடம் ஏப்ரல் 12 ம்திகதிக்கு பின் தான் இயங்குமாம்.
இன்னொரு தளம் metacafe.com இத்தளத்தில் நீங்கள் ஏற்றும் வீடியோ 20,000 தடவை பார்வையிடப்பட்டால் $100 கிடைக்கும்.2 மில்லியன் தடவை பார்வையிடப்பட்டால் $10,000 கிடைக்கும்.
No comments:
Post a Comment