Please Visite here - www.cenimagallary.blogspot.com

Tuesday, February 24, 2009

ஓய்வு பெறுகிறார் ஸ்டீவ் பக்னர்

ஐ.சி.சி. உயர் மட்டக் குழுவில் உள்ள மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த நடுவர் மேற்கிந்திய தீவுதென் ஆப்பிரிக்கா ஆஸ்ட்ரேலிய தொடருடன் டெஸ்ட் போட்டிகளிலிருந்தும், மேற்கிந்திய தீவுகளுக்கும் இங்கிலாந்திற்கும் இடையே பார்படோஸில் மார்ச் 29ஆம் தேதி நடைபெறும் ஒரு நாள் சர்வதேசப்போட்டியுடன் ஒரு தினப்போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

1989ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் நடுவர் பொறுப்பை ஏற்று பணியாற்றத் தொடங்கிய ஸ்டீவ் பக்னர் இது வரை 126 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக இருந்து சாதனை படைத்துள்ளார். 179 ஒரு தின போட்டிகளிலும் இவர் நடுவராக இருந்துள்ளார்.

1992 உலகக் கோப்பை இறுதிப் போட்டி முதல் 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரை 5 உலகக் கோப்பைகளில் இறுதிப் போட்டியில் நடுவர் பொறுப்பு வகித்து சாதனை படைத்துள்ளார் பக்னர்.

பந்து வீச்சாளர்கள் உரத்த குரலில் முறையீடு செய்யும் போது நாட் அவுட்டாக இருந்தால் உடனேயே இல்லை என்று தலையாட்டி விடும் இவர் அவுட் என்று தீர்மானித்தால் யோசித்து மெதுவாகவே அவுட் கொடுப்பார். பல பேட்ஸ்மென்கள் இனிமேல் இவர் நமக்கு அவுட் கொடுக்க மாட்டார் என்று நினைத்த தருணத்தில் கடைசி நேரத்தில் கையை உயர்த்தி வெறுப்பேற்றியுள்ளார்.

கடந்த முறை இந்திய அணி ஆஸ்ட்ரேலிய சென்றிருந்த போது சிட்னியில் நடைபெற்ற மோசடி டெஸ்டில் ஆஸ்ட்ரேலிய அபாண்ட வெற்றிக்கு இவரது மோசடி தீர்ப்புகள் உதவின. ஆண்ட்ரூ சைமன்ட்சிற்கு மட்டும் சுமார் 6 முறை அவுட் மறுக்கப்பட்டது.

டெஸ்டை மோசடி வெற்றியிலிருந்து காக்க ஆடிக் கொண்டிருந்த திராவிட் உள்ளிட்ட இந்திய வீரரகளுக்கு கேட்டவுடன் அவுட் என்று இவரது நடுவர் திறமையின் மீது ஏகப்பட்ட சர்ச்சைகள் எழுந்து கடைசியில் இந்திய அணி நிர்வாகத்தின் கோரிக்கைக்கேற்ப இவர் அந்த தொடரிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்த டெஸ்ட் போட்டியை தவிர மற்ற போட்டிகளில் இவரது நடுவர் பணி சிறப்பாகவே அமைந்தது என்று கூறலாம்.

ஓய்வு பெற்றவுடன் மேற்கிந்திய தீவுகள் வாரியத்துடன் இணைந்து நடுவர் தரத்தை உயர்த்தப் பாடுபடப்போவதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment