இது வரை ஏதோ பத்தோட பதினொன்னா இருந்த ஓபன் ஆபீஸ் ப்ரோக்ராம் version 3 வந்த உடனே நிறைய பேரை திரும்பி பார்க்க வைத்து இருக்கிறது .
இது வரை 4 கோடி பேர் டவுன்லோட் லிங்கை கிளிக் செய்து இருக்கிறார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.
அத்தனை முறை மொத்தமாக டவுன்லோட் ஆகி விட்டதா என்று கேட்காதீர்கள். டவுன்லோட் லிங்கை கிளிக் செய்து அப்புறம் அம்போன்னு விட்டதும் இதுலே சேர்த்தி .
இப்படி பார்த்தா ஒரு முறை டவுன்லோட் செய்து ஆபீஸ் முழுக்க 1000 கணினியில் இன்ஸ்டால் செய்தாலும் ஒரு நம்பெர்தான் கணக்கு.
இதைத்தவிர மாத இதழ்களில் கூட வரும் cd அல்லது dvd யில் இன்னும் எத்தனையோ காப்பிஸ் மக்களை போய் சேர இருக்குறது.
கிட்டத்தட்ட எல்லா லினக்ஸ் டிஸ்ட்ரோவிலும் ஓபன் ஆபீஸ் சேர்ந்து வருகிறது.
எம் எஸ் ஆபீஸ் செய்யும் 90 சதவீத வேலைகளை ஓபன் ஆபீஸ் செய்யுதுன்னு சொல்றாங்க.
எம் எஸ் ஆபீஸில்தான் மைக்ரோசாப்ட்கு நல்ல வருமானம்.
இன்ன வரை ஓபன் ஆபீஸ் டவுன்லோட் கணக்கு தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment