நம்மில் பலரும் இணையத்தில் உலவும்போதோ, கணினியில் விளையாடும்போதோ, வலைப்பதியும்போதோ இணைய வானொலி (internet radio) நிகழ்ச்சிகளைக் கேட்கும் வழக்கமுடையவர்களே.
பல நேரங்களில் தொடர்ச்சியான பாடல்களைக் கேட்பதுகூட வெறுமையளிக்கும். அப்போது இணையவானொலியில் அறிவிப்பாளர்களின் குரலைக் கேட்பது மனதுக்கு இதமளிக்கும்.
இந்த நிகழ்ச்சிகளை கணினியில் download (தரவிறக்கம் - இணையிறக்கம்) செய்து மீண்டும் மீண்டும் கேட்டுமகிழ உதவக்கூடிய இலவசமென்பொருட்களை இங்கே தருகிறேன்.
1) Screamer Radio : இந்த மென்பொருள் வாயிலாக ஏராளமான இணைய வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்பதற்கும் அவற்றைக் கணினியில் பதிவதற்கும் நல்ல வாய்ப்பு. எந்த channelன் நிகழ்ச்சியைப் பதிவு செய்ய (record) விரும்புகிறீர்களோ அதை நீங்கள் தேர்வு செய்யவேண்டும். MP3, OGG, AAC, WMA ஆகிய கோப்பு வடிவங்களில் (file format) பதிவு செய்து மீண்டும் மீண்டும் கேட்டு மகிழலாம்.
2) XstreamRadio :
ஆயிரக்கணக்கான தேசிய, உலகலாவிய (National, International) இணையவானொலிகளைக் கேட்டும், அவற்றைக் கணினியில் பதிந்தும் மகிழ அருமையான மென்பொருள்
3) Nexus Radio :
எட்டாயிரத்துக்கும் அதிகமான வானொலி நிலையங்கள் மற்றும் 15 மில்லியன் பாடல்கள் இவற்றை இணைய வாயிலாக இலவசமாகக் கேட்டுமகிழ உதவுகிறது. iPod, iPhone அல்லது வேறுவிதமான கருவிகளில் பதிந்து கேட்டு மகிழலாம்.
4) Free Sound Recorder : MP3, WMA or WAV கோப்புகளாகப் பதிவு செய்ய ஒரு வாய்ப்பை உருவாக்கித் தருகிறது.கணினியின் sound card ஐப் பயன்படுத்தி இசை, பாடல், குரலொலி போன்றவற்றைப் பதிவுசெய்ய எளிமையான மென்பொருள்.
5) Freecorder Toolbar : 100% இலவசமான மென்பொருள் இது. ஒலிப்பதிவு செய்ய ஏற்றதாகவும், உலவியிலிருந்தபடியே (browser) இதை இயக்கலாம்.
ஒளிக்களஞ்சியம் : ஒரு மாறுதலுக்காக மனிதனைக் குரங்காய் மாற்றுவோம் வாங்க - Charles Darwin 200வது பிறந்தநாளை முன்னிட்டு வெளிவந்த video
No comments:
Post a Comment