Please Visite here - www.cenimagallary.blogspot.com

Tuesday, July 14, 2009

ஏ.வி.ஜி லிங்க் ஸ்கானர்

ஏ.வி.ஜி. டெக்னாலஜிஸ் நிறுவனம் ஆன்லைனில் நமக்குக் கிடைக்கும் பயமுறுத்தல்களிலிருந்தும் நமக்குத் தெரியாமல் நம் சிஸ்டத்தை வந்தடையும் வைரஸ்களிலிருந்தும் பாதுகாக்கும் வகையில் ஏவிஜி லிங்க் ஸ்கேனர் (AVG Link scanner) என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு நாளும் குறைந்தது 20 லட்சம் இன்டர்நெட் வெப் சைட்டுகள் மறைந்திருந்து தாக்கும் பயமுறுத்தல்களால் கெடுக்கப் படுகின்றன. இவற்றில் 60 சதவிகிதம் தளங்களை மூடுகின்றன; அல்லது இணையத்தில் வேறு இடங்களுக்குக் கொண்டு செல்கின்றன. இதனால் நாம் அந்த தளங்களுக்கு வழங்கப்பட்ட லிங்க்குகள் பயனற்றதாய் அமைந்துவிடுகின்றன. இது போன்ற தளங்களுக்கு ஒருவர் விசிட் செய்தாலே போதும்; அவரின் கம்ப்யூட்டரிலிருந்தும் தகவல்கள் திருடப்படும். அவர் அந்த தளத்தில் எதனையும் கிளிக் செய்ய வேண்டியதே இல்லை. அந்த தளத்திற்குச் சென்று அதன் தகவல்களைப் பார்த்தாலே போதும்.

இது போல ஓர் இணைய தளத்தில் மறைந்திருந்து தாக்கும் விஷமத்தனமான புரோகிராம்களை வழக்கமான ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளால் முற்றிலுமாகக் கண்டறிய முடியாது. இவற்றினைக் கண்டறிய புதிய வகை பாதுகாப்பு வளையம் தேவைப்படுகிறது. அதனைத்தான் ஏவிஜி நிறுவனம் தற்போது வழங்கியுள்ளது.

ஏவிஜி லிங்க் ஸ்கேனர் ஒருலிங்க் அல்லது ஒரு யு.ஆர்.எல்.முகவரியினைத் தருகையில் அதன் வெப் சைட்டை ஆய்வு செய்து அதில் இது போன்ற மறைந்திருந்து தாக்கும் பயமுறுத்தல்கள் இருக்கின்றனவா என்று பார்க்கிறது.

அப்படி ஒரு பயமுறுத்தல் இருக்கும் பட்சத்தில் இன்டர்நெட் பயன்படுத்துபவரை அந்த தளத்தைத் தங்கள் கம்ப்யூட்டருக்கு இறக்குவதிலிருந்து தடுக்கிறது.இதனால் விஸ்டா மற்றும் எக்ஸ்பியில் செயல்படுபவர்கள் இன்டர்நெட்டில் ஏதேனும் ஒரு லிங்க்கில் கிளிக் செய்தால் உடனே அது பிஷ்ஷிங் போன்ற பயமுறுத்தல்கள் அந்த தளத்தில் உள்ளனவா என்று அறிந்து கொள்ளலாம்.

கூகுள், யாஹூ மற்றும் எம்.எஸ்.என். மூலமாக தளங்களைத் தேடும்போதும் ஏவிஜி லிங்க் ஸ்கேனர் தேடலில் பட்டியலிடப்படும் தளங்களின் பாதுகாப்பு எத்தகையது என்று காட்டுகிறது. அதே போல நாம் புக் மார்க் செய்திடும் தளங்களின் முகவரிகள் மூலம் அந்த தளங்களை ஆய்வு செய்து ஆபத்து உள்ளதா என்று காட்டுகிறது.

இந்நாளில் வைரஸ்கள் மற்றும் பிற மால்வேர்கள் பரவுவதற்குச் சரியான தளங்களாக இணைய தளங்கள் இயங்குகின்றன. இவற்றில் தளங்களிலேயே மறைந்திருந்து தாக்கும் இந்த ஆன்லைன் பயமுறுத்தல்கள் மிகவும் ஆபத்தானவையாகும்.

எனவே தான் இவற்றை எச்சரிக்கும் பாதுகாப்பு வளையத்தினை வழங்குவதனை முதல் பணியாக மேற்கொண்டு இந்த ஏவிஜி லிங்க் ஸ்கேனரைத் தந்துள்ளோம் என்று இந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த லிங்க் ஸ்கேனர் இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. இந்த பாதுகாப்பு வளையத்தின் செயல்பாடுகள் குறித்த உதவிக் கிடைக்கின்றன.இந்த பாதுகாப்பு வளையத்தினை விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா (32/64 பிட் தொகுப்பு) ஆகியவற்றில் பயன்படுத்தலாம்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

உதவிக் குறிப்புக்களுக்கு : இங்கே கிளிக் செய்யவும்

இதைவிட மெக்கபி ஏற்கனவே சைட் அட்வைஸர் என்ற மென்பொருளை இலவசமாக தருகிறது.இதில் மிக கூடுதல் வசதி வேண்டும் என்றால் மட்டும் பணம் கொடுத்து ப்ரபெசனல் பதிப்பு வாங்க வேண்டும்.























மற்றபடி இதனை அப்படியே இலவசமாக பாவிக்க எந்த கட்டணமும் இல்லை.இதில் ஒவ்வொரு தளத்துக்கும் நுழைய முன்னரே சிவப்பு பச்சை என அந்த தளத்தின் நம்பகத்தனமையை காட்டி விடும்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment