Please Visite here - www.cenimagallary.blogspot.com

Tuesday, July 14, 2009

மீண்டும் இணையும் கஜினி நாயகர்கள் - மும்மொழியில் உருவாகிறது

கஜினியைக் கொடுத்த இரு பெரும் நாயகர்களான சூர்யாவும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும், மீண்டும் ஒரு மெகா திட்டத்திற்காக இணைகிறார்கள்.

ஒவ்வொரு மொழியாக அடித்தால் போதாது என்றோ என்னவோ, ஒரே நேரத்தில் மூன்று மொழிகளையும் கலக்கும் நோக்கில், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளி்ல இந்தப் படம் உருவாக்கப் போகிறார் முருகதாஸ்.

கஜினி, சூர்யாவுக்கு மிகப் பெரிய பிரேக். அதேபோல இந்தியிலும் கஜினியின் ரீமேக் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தமிழில் கஜினியின் நாயகனான சூர்யாவும், முருகதாஸும் மீண்டும் கை கோர்க்கிறார்கள். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தியில் இப்படம் உருவாகிறது.

படத்தைத் தயாரிக்கப் போவதும் ஒரு பெரும் புள்ளிதான். துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும், குருவி படத் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின்தான் இந்த மெகா படத்தைத் தயாரிக்கிறார்.

இதுகுறித்து முருகதாஸ் கூறுகையில், ஆமாம், 3 மொழிகளில் இப்படத்தை உருவாக்கப் போகிறோம். சூர்யாதான் 3 மொழிகளிலும் நாயகன். மற்ற கலைஞர்கள் இன்னும் முடிவாகவில்லை.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இது ஒரு முழுமையான ஆக்ஷன் படம். என்ன மாதிரியான ஆக்ஷன் என்பதை தற்போது இறுதி செய்து கொண்டிருக்கிறோம் என்றார் முருகதாஸ்.

சரி, ஷாருக்கானுடன் இணைவது என்னவாயி்ற்று என்று கேட்டபோது, ஷாருக்குடன் ஒரு கதையை டிஸ்கஸ் செய்தேன். அந்தக் கதையை இப்போது படமாக்கப் போகிறோம். எப்போது என்று கூற முடியாது.

நிச்சயம் இது ரமணாவின் ரீமேக் இல்லை. முற்றிலும் புதிய கதை. ஒரிஜினல் கதை என்றார் முருகதாஸ்.

தற்போது சூர்யா ஆதவன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து ஹரி இயக்கத்தில் சிங்கத்தில் நடிக்க வேண்டியுள்ளது. இவற்றை முடித்த பின்னர் முருகதாஸ் படத்துக்கு வருகிறார் சூர்யா.

No comments:

Post a Comment