Please Visite here - www.cenimagallary.blogspot.com

Thursday, July 2, 2009

கணினித் திரை நடவடிக்கைகளை நகர்படமாக்குவதற்கு


Camstudio என்பது ஒரு இலவச மென்பொருள். இதன் நிரலும் இலவசமாக வழங்கப்படுகிறது . கணினித் திரையில் நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஒரு நகர்படமாக படம்பிடிப்பதற்கு (Screencast) இந்த மென்பொருள் உதவும். இதன் நடப்பு பதிப்பானது வெறும் 1.3 MB அளவு கொண்டது.

இதை ஒரு USB memory கருவியில் அடைத்து எளிதாகப் பயன்படுத்தலாம். இதன் புதிய பதிப்பான 2.0 ல், கணினித் திரையின் நடவடிக்கைகளை SWF (Shockwave Flash file ) கோப்பாக பதிந்திடும் வசதி உள்ளது. இதை Flash player வாயிலாக காண முடியும். கணினித் திரை நடவடிக்கைகளை AVI (Audio Video Interleave) ஆகவும் பதிந்திடலாம்.


இது 100% இலவசமான ஒரு மென்பொருள். உரிமம், உறுப்பினராதல் (license, registration) பற்றிய கவலையின்றி இதை அப்படியே பயன்படுத்தலாம்.

Download Link: http://camstudio.org/
AmazingPhotos

No comments:

Post a Comment