நடிகை மோகினியும், அவரது கணவரும் தொடர்ந்து விவாகரத்து வழக்கு விசாரணைக்கு இருவரும் தொடர்ந்து வராமல் இருந்தாதல் வழக்கை சென்னை குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
மகாலட்சுமி என்ற இயற் பெயர் கொண்ட மோகினி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவரது கணவர் பரத். இருவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் நடந்தது.
இதன் விளைவாக இருவருக்கும் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கணவன், மனைவிக்கு இடையே பூசல் ஏற்பட்டது. பிரிந்தனர். விவாகரத்து செய்யவும் முடிவு செய்தனர்.
அதன் படி இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதன் பின்னர் இருவரும் சில விசாரணைகளுக்கு வந்து சென்றனர். ஆனால் அதன் பின்னர் இருவருமே வரவில்லை. தொடர்ந்து நான்கு முறையாக அவர்கள் இருவரும் வராததால் கோர்ட் மனுவை தள்ளுபடி செய்து விட்டது
No comments:
Post a Comment