இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவின் நிச்சயதார்த்தம் நேற்று நடந்து முடிந்தது. அவருக்கும், அவரது சிறுவயது தோழர் சோரப் மிஸ்ரா என்பவருக்கும் திருமணம் முடிவானது.

நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காக சானியாவுக்கு ரூ. 20 லட்சம் பிரத்யேக ஆடை தயாரிக்கப்பட்டிருந்தது. பிரபல பேஷன் டிசைனர் சாந்தனு-நிகில் இந்த உடையை வடிவமைத்திருந்தனர். மணமகன் சோரப் இதை சானியாவுக்கு பரிசாக வழங்கினார்.
நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணம் தேதி குறித்தும் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இது குறித்து சானியாவின் தந்தை இம்ரான் மிர்ஸா கூறுகையில்,
எங்கள மத வழக்கப்படி சானியாவின் திருமண நிச்சயதார்த்தம் சிறப்பாக முடிந்தது. அவர் இன்னும் இரண்டு ஆண்டுகள் டென்னிஸ் விளையாட வேண்டும் என விரும்புகிறார். அதனால் திருமணத்தை 2 ஆண்டுகளுக்கு பின் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அவரது விருப்பப்படி இரண்டு ஆண்டுகள் பின் தான் திருமணம் நடக்கும். அவர் அடுத்த மாத கடைசியில் துவங்கும் யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரில் விளையாடுவார். சோரப் மிஸ்ராவும் தற்போது எம்பிஏ படிக்க இங்கிலாந்து செல்கிறார். அவரும் இரண்டு ஆண்டுகளில் படிப்பை முடித்துவிடுவார் என்றார் இம்ரான் மிர்ஸா.
No comments:
Post a Comment