கவர்ச்சி நடிகை சோனா வெறும் வயிற்றுடன் நடனம் ஆடியதால், மயங்கி விழுந்தார். இதனால் படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது.

சோனா அதற்கு முன்பு சில படங்களில் நடித்திருந்தாலும் குசேலன்தான் அவரை தூக்கி விட்டது. இதையடுத்து தொடர்ந்து கவர்ச்சிகரமாக நடித்து வருகிறார் சோனா.
தற்போது வீர சோழன் என்ற படத்தில் கொய்யாப்பழ வியாபாரி வேடத்தில் நடிக்கிறார் சோனா. இதற்காக மானாமதுரை பகுதியில் பாட்டுப் பாடியபடி கொய்ப்பாழத்தை கையில் ஏந்தி சோனா விற்பது போல படமாக்கினர்.
சமீப காலமாக சோனா கடும் டயட்டில் இருக்கிறார். உடல் எடையைக் குறைப்பதற்காக இந்த டயட். மேலும், டான்ஸ் ஆடும்போதும் அவர் சாப்பிட மாட்டார். வெறும் ஜூஸ் மட்டும்தான் குடிப்பாராம்.
அதேபோல நேற்றும் கடும் வெயிலில், வைகை ஆற்றங்கரை ஓரமாக பாடலைப் படம் பிடித்தனர்.
அப்போது ஆடிக் கொண்டிருந்த சோனா திடீரென மயக்கம் போட்டு விழுந்து விட்டார். உடனே முகத்தில் தண்ணீரை அடித்து எழுப்பினர். டாக்டரை அழைத்து பரிசோதித்தபோது, வெறும் பசி மயக்கம்தான், வேறு ஒன்றும் இல்லை என்று கூறி அனைவரையும் நிம்மதியடைய வைத்தார்.
பின்னர் ரெஸ்ட் எடுத்த சோனா அதன் பின்னர் பாடல் காட்சியில் பங்கேற்று ஆடி முடித்தார்.
No comments:
Post a Comment