Please Visite here - www.cenimagallary.blogspot.com

Thursday, July 9, 2009

சிக்கலில் ஆயிரத்தில் ஒருவன்?

புதிய முயற்சிக்கு முதலில் கைகொடுக்கத் தயங்குவதும், அந்த முயற்சி வெற்றி பெறுவது போலத் தெரிந்தால் சொந்தம் கொண்டாட ஓடி வருவதும் தமிழ் சினிமாவுக்குப் புதுசா என்ன!

அந்த வகையில், 32 கோடி ரூபாய் செலவில் படமாக்கப்பட்ட புதுமையான படம் என செல்வராகவன் வர்ணித்த ஆயிரத்தில் ஒருவனை வாங்க விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டுகிறார்கள் என்பதுதான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் பேச்சு.

கார்த்தி, ரீமா சென் ஆகியோர் முக்கிய பாத்திரம் ஏற்று நடிக்க பார்த்திபன், ஆண்ட்ரியா ஆகியோர் கௌரவ வேடங்களில் நடித்துள்ளனர்.

ஆனால், இந்தப் படம் வழக்கமான செல்வராகவன் டைப் காதல் படம் இல்லை என்பதே பல விநியோகஸ்தர்களின் குற்றச்சாட்டாக உள்ளதாம். (இப்படித்தான் படம் எடுக்க வேண்டும் என இயக்குநரையே நிர்பந்திக்கும் விநியோகஸ்தர்களை இங்குதான் பார்க்க முடியும்!)

'சரித்திரப் படமாக ஆரம்பிக்கும் இந்தக் கதை, மக்களை எந்த அளவு கவரும் என கணிக்க முடியாததால், இந்த நெருக்கடியான சூழலில் இருக்கிற பணத்தைத் தொலைக்காமல் இருந்தால் போதும் என்ற முடிவோடு அமைதி காக்கிறோம்', என்றார் ஒரு விநியோகஸ்தர்.

இதனால் ஆடியோ வெளியாகி ஒருமாதமான பிறகும் படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரனால் ரிலீஸ் குறித்து ஏதும் திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை.

எனவே தனது சிறிய பட்ஜெட் படமான வாமனனை இப்போதைக்கு ரிலீஸ் செய்யும் தீவிரத்தில் உள்ளார் ரவீந்திரன்.

இருக்கிற டிவி சேனல்களும் படத்தை அடிமாட்டு விலைக்கு கேட்பதால் சொந்தமாகவே ரிலீஸ் செய்யலாமா என்ற யோசனையில் இருக்கிறாராம் தயாரிப்பாளர்.

No comments:

Post a Comment