Please Visite here - www.cenimagallary.blogspot.com

Thursday, July 9, 2009

ரஜினியை அழ வைத்த இயக்குநர்


நல்ல மெசேஜ் சொல்லும் படமோ, கமர்ஷியல் படமோ...ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டாலே அந்தப்படத்தின் இயக்குநரை அழைத்து பாராட்டுவது ரஜினியின் வழக்கம். அந்த மாதிரியான சமயங்களில் தனக்கு ஏதும் கதை வைத்திருக்கிறீர்களா என்று கேட்பதும் ரஜினியின் வழக்கம்.

இதனால் சில இயக்குநர்கள் ரஜினிக்கு கதை சொல்லியிருக்கிறேன் என்று பத்திரிக்கைகளில் சொல்லிவிடுவதால் சில காலங்கள் பாராட்டுவதை தவிர்த்து வந்தார். ஆனாலும் அவரால் ரொம்ப காலத்திற்கு அப்படி இருக்க முடியவில்லை.

நான் கடவுள் பார்த்துவிட்டு தமிழ்சினிமாவில் இப்படி ஒரு படம் இனி வருவதற்கு வாய்ப்பில்லை என்று பாராட்டித்தள்ளினார். வரிசையாக இன்னும் நிறைய படங்களை வாழ்த்தினார்.

தற்போது பசங்க படத்தை பார்த்துவிட்டு அப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜை அழைத்து பாராட்டியிருக்கிறார்.

தனது படத்தின் வால் டீமோடு போய், வாயார பாராட்டுகளை வாங்கிய பாண்டிராஜ், அப்படியே ரஜினியை அழ வைத்துவிட்டார்.


சினிமா ஆசையில் சென்னைக்கு வந்த பாண்டிராஜ், ஏவிஎம் ஸ்டுடியோவில் வாட்ச் மேனாக வேலை பார்த்திருக்கிறார். சென்னைக்கு போயும் மகன் நல்லபடியாக வாழ வில்லையே என்ற
ஏக்கத்தில் அவரது தாயார் இறந்துவிட்டாராம்.

பிறகு பாக்யராஜிடம் வேலைக்கு சேர்ந்து எப்படியோ முன்னேறி பட வாய்ப்பையும் பெற்ற பாண்டி, அந்த சந்தோஷத்தை அப்பாவிடம் சொல்லலாம் என்று போனால், அதை உணரவே முடியாத மனநோயாளி ஆகியிருந்தாராம் அவர்.

கவலையோடு சென்னை திரும்பிய பாண்டிராஜ் திரும்ப ஷ¨ட்டிங் போகும்போது அவரது அப்பா காணாமலேயே போயிருந்தார். எங்கெங்கோ தேடி அழைத்து
வந்து வீட்டில் வைத்திருந்தாராம்.

அப்பாவின் கண் எதிரிலேயே தனது பசங்க பட ஷ§ட்டிங்கையும் நடத்தியிருக்கிறார். அவருக்கு புரியவில்லை என்றாலும், இதை பார்த்தாவது பழைய நிலைக்கு வந்துவிட மாட்டாரா என்ற ஏக்கம்தான்.

ஆனால், இந்த நம்பிக்கையையும் ஏமாற்றிவிட்டு ஒரு நாள் இறந்தே போனார் இவரது அப்பா. ஊர் உலகமே எனது படத்தை பாராட்டுகிறது. நான் நன்றாக இருப்பதை அறியாமலே
இறந்துவிட்டார்கள் எனது பெற்றோர் என்று பாண்டிராஜ் கண் கலங்க, அழுதே விட்டாராம் ரஜினி.

No comments:

Post a Comment