கணினியில் நாம் அடிக்கடி பார்க்கும் வீடியோ கோப்புகளின் வடிவமானது AVI என அமைந்திருக்கும். இந்த வடிவானது, iPhone, iPod, Zune, PSP, PS3 போன்ற கருவிகளுடன் ஒத்திசைவு (compatibility) இல்லாதது. MP4 வடிவங்களையே மேற்கண்ட கருவிகள் ஏற்றுக்கொள்கின்றன.
AVI கோப்புகளை MP4 ஆக மாற்றுவதற்கு ஒரு இலவச மென்பொருள் உள்ளது. அதன் பெயர் Convert AVI to MP4. இதன் மூலம் WMA, MOV, MPEG1 / MPEG2, DivX ஆகிய பல்வேறு விதமான கோப்பு வடிவங்களை MP4 ஆக மாற்ற முடியும்.
மிகஎளிமையான முகப்பைக் கொண்ட மென்பொருள் இது. இது Windows XP மற்றும் Windows Vista இந்த இயங்குதளங்களில் இயங்கும்.
No comments:
Post a Comment