கார்டிப்: இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்டில் கேப்டன் பாண்டிங், சைமன் காடிச் சதம் கடந்து அசத்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 1 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 435 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் கார்டிப் நகரில் நடக்கிறது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து முதல் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து, துவக்கத்திலே பிளின்டாபின் விக்கெட்டை இழந்தது. அவர் 37 ரன்களுக்கு அவுட்டானார். ஆண்டர்சன் 26, பிராட் 19 ரன்கள் எடுத்தனர்.
கடைசிநேரத்தில் களமிறங்கிய சுவான் அதிரடியாக பேட் செய்தார். அவர் 40 பந்தில் 47 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து 106.5 ஓவரில் 435 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
அடுத்து பேட் செய்த ஆஸ்திரேலியாவுக்கு ஹக்ஸ், காடிச் ஜோடி சிறப்பான துவக்கம் தாந்தது. ஹக்ஸ் 36 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்த வந்த பாண்டிங், காடிச்சுடன் இணைந்தார். இந்த ஜோடி இங்கிலாந்து பந்துவீச்சை விளாசி தள்ளியது. இந்த ஜோடியை பிரிக்க இங்கிலாந்து மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இருவரும் சதம் கடந்த அசத்தினர். இரண்டாவது நாள் முடிவில் ஆஸ்திரேலியா 71 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது. காடிச் 104, பாண்டிங் 100 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
No comments:
Post a Comment