Please Visite here - www.cenimagallary.blogspot.com

Saturday, July 14, 2012

பில்லா 2 திரை விமர்சனம்! - Ajith Billa 2 Movie Review




  ரஜினிக்கு பிறகு ஒரு நடிகரின் படத்திற்கு நல்ல ஓபனிங் இருக்குமென்றால் அது அஜித்
மட்டும்தான்! ரசிகர்கள் என்பதைவிட "தல" வெறியர்கள் என்பதுதான் பொருத்தமாய்
இருக்கும்! படம் ஓடுதோ இல்லையோ என்பது வேறு விஷயம்! எப்படியும் உங்களுக்கு
ஒரு வாரத்திற்கு டிக்கெட் கிடைக்காது!


  துபாயில் விசில்ரகளை என அனைத்துமுடன் இந்தியாவில் வெளியாவது போல் ஒரு
 படம்  வெளியாகிரதென்றால் அது அஜித் படம் மட்டும்தான்! படத்திற்கு இரண்டு மணி
 நேரத்திற்கு முன்னமே வெளியில் காத்திருந்து - கூட்டமென்றால் அப்படியொரு கூட்டம்,
 முக்கியமாக இலங்கைத் தமிழர்களில் முக்கால்வாசிப்பேர் அஜித் ரசிகர்கள் என
 நினைக்கிறேன்.!
  
கதை:

  பில்லா படத்தின் முன்பாகம்! அதாவது டேவிட் எப்படி பில்லாவாக மாறினார் என்பதே
கதை. இலங்கை அகதியாக இந்திய எல்லைக்குள் நுழைவது முதல்சிறுசிறு கடத்தல்
தொழில் ஈடுபட ஆரம்பித்து கடைசியில் மிகப்பெரிய டானாக மாறுகிறார். எதிரில் வரும்
அனைவரையும் போட்டு தள்ளுகிறார். போலீஸ், ரவுடி, அரசியல்வாதி, மற்ற டான்கள்,
என எல்லோரையும் குருவி சுடுவதுபோல் சுட்டுத் தள்ளுகிறார். படம் முழுதும் ரத்தம்!
ரத்தம்!! ரத்தம்!! அஜித்தின் நடிப்பு நன்றாய் இருக்கிறது.

  மாமா பொண்ணாக ஜாஸ்மின் என்ற பாத்திரத்தில் பார்வதி ஓமனக்குட்டன்! நாம


எதிர்பார்த்தது பார்வதிகிட்டே இல்லை! J  டான் படமென்றால் சொந்தங்கள் சாகவேண்டும்
என்ற நியதி மாறாமல் இடைவேளைக்குப் பிறகு வில்லனிடம் கழுத்தறுபட்டு
செத்துப்போகிறார்


  பிட்டு காட்சிக்கென்றே ஒரு நடிகை வேண்டுமல்லவாபுரூனோ! படம் முழுதும் நீச்சல்
உடைகளிலேயே திரிகிறார். அவர் வரும் இடங்களிலெல்லாம் ஒன்று நீச்சல் குளம்
இருக்கிறது. அப்படி இல்லேனாலும் நீச்சல் உடைகளில்தான் வருகிறார். கண்கொள்ளா 
காட்சி.


படத்தின் நிறைகளும் குறைகளும்!

ஹாலிவுட் படம் எடுக்க முயற்சி பண்ணியிருக்கிறார்கள்! பாடல்கள் படமாக்கப்பட்டவிதம்
அருமை! "இதயம்" "டான் டான்" பாடல்கள் அழகு! அஜித் கைதாகி கோர்ட்டில் வக்கீல்கள்
அவருக்கு எதிராய் வாதாடியும் நீதிபதி ஜாமீன் கொடுக்கும் காட்சி செம!

படத்தின் தவறு என்றால் திரைக்கதையில் சொதப்பியதும்எடிட்டிங்கில் சொதப்பியதும்தான்!
ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போதே அடுத்த காட்சிக்கு சென்றுவிடுகிறது. இதுபோன்ற
அடிதடி, ரத்தம், பாடல் முட்டுமே கொண்ட டான் படங்களுக்கு திரைக்கதைதான் உயிர்! அதைக்காணவில்லை.

  இலங்கை அகதியாக அஜித் வருகிறார். ஆனால் ஒரு வார்த்தைகூட இலங்கைத் தமிழி 
பேசவில்லை! (அவரு தமிழ்ல பேஸ்றதே பெரிய விஷயம்!) உடனிருக்கும் அகதிகள்கூட
அதேபோல்தான்! இதைக்கூடவா இயக்குனர் கவனிக்கவில்லை?

  படம் முழுதும் அஜித் பேசுவதெல்லாம் பஞ்ச் டயலாக்! அநேகமா பேரரசு எழுதி
கொடுத்திருப்பாரோ?
  • போராளிக்கும் தீவிரவாதிக்கும் ஒரே ஒரு வித்தியாஸம்தான்! ஜெயிச்சுட்டா போராளி!
  • நண்பனா இருக்க தகுதி தேவையில்ல எதிரியா இருக்க தகுதி வேணும்!
  • அகதிதான் அடிமையில்ல!
  • என்னோட வாழ்க்கைல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஸமும் ஏன் ஒவ்வொரு
  •  நொடியும் நானே செதுக்குனதுடா
  • உட்கார்ந்து வேலை செய்பவனுக்கும் உயிரைக்கொடுத்து வேலை செய்பவனுக்கும்
  •  வித்தியாஸம் இருக்கு”


  "டான் டான் டான்" பாடலை படம் முடிந்த பிறகு போடுகிறார்கள் - வெண்ணைகளா 
அந்த படத்திலேயே சூப்பர் பாட்டு அதுதான்! அத விட்டுவிட்டு மற்ற பாடல்களை மட்டும்
கதையில் போட்டால்?


பின்னாடி குண்டுபோட்டு கட்டிடம் வெடித்துச் சிதரும்போது அஜித் நடந்து வருவதெல்லாம் 
- ஸ்ஸ் முடியல! நடந்துகிட்டே இருந்தா எப்புடி?

  நிறைய சண்டை காட்சிகள் ஏற்கனவே ஹாலிவுட் படங்களில் பார்த்தவை! ட்ரெயின
வெடிக்க வைப்பது, ஆயுத குடோனில் வரும் சண்டை இதெல்லாம் ஏற்கனவே பார்த்தாச்சு!

  நீங்கள் பைனல் டெஸ்டினேசன் போன்ற ஹாலிவுட் படங்களின் பிரியர் என்றால் இந்த
படத்தை நிச்சயம் பார்க்கலாம்! மற்றபடி காமெடிகதை இதையெல்லாம் எதிர்பார்த்து
போக வேண்டாம்!

No comments:

Post a Comment