சிலர் டைரியிலயோ காலண்டர்லயோ விவரமா குறிச்சி வச்சிட்டு வாழ்த்து சொல்லி வசவு வாங்குவதிலிருந்து தப்பிச்சிடுறாங்க.
ஒரு சிலர் கடமையே கண்ணாக சரியா அந்த தேதியை நியாபகம் வச்சி அசத்திடுறாங்க. ஆனா ஒரு Girl Friend இருந்தா இது பரவாயில்லை. நம்ம கோகுலத்து கண்ணன் கணக்கா இருப்பவங்களுக்கு இது கொஞ்சம் கஷ்டம் தான்.
எனக்கு ஒரு பழக்கம், எல்லா நண்பர்களளோட பிறந்த நாளையும் கூகிள் காலண்டர்ல குறிச்சி வச்சிக்கிறது.
சரி இதை எப்படி செய்யறதுனு பார்க்கலாம். ரொம்பவும் சுலபம் தான்.
https://www.google.com/calendar போங்க. உங்க google அக்கவுண்ட்ட லாகின் செஞ்சிக்கோங்க.
எந்த நாளை நீங்க நியாபகம் வச்சிக்கனுமோ அந்த நாளை கிளிக் பண்ணினா Event | Task அப்படினு ஒரு பொட்டி வரும்.
Edit event details » ஐ கிளிக்கி, What, When, Where, Description எல்லாம் கொடுத்து சேமிச்சிக்கோங்க.
பொறந்த நாளோ, திருமண நாளோ குறிச்சி வைக்கனும்னா, Repeatsங்கறதுல Yearly ஐ செலக்ட் பண்ணிட்டு, Ends: Never கொடுத்துக்கோங்க.
Description க்கு கீழ பாத்தீங்கண்ணா Options இருக்கும். இதுல உங்க மொபைலுக்கு SMSம் Emailம் எத்தனை நாள் / மணி நேரத்திற்கு முன்னாடி வரணும்னு செட் பண்ணிட்டா முடிஞ்சது.
சரி மொபைல் நம்பரை இதில் எப்படி இணைக்கிறதுனா? Settings >> Calender Settings >> Mobile Setup போய்ட்டு உங்க mobile number கொடுத்து Verification பண்ணிடுங்க.
அவ்வளவுதான், இனிமே முக்கியமான நாட்களை மறந்துட்டு Girl Friend கிட்டயோ Wife கிட்டயோ அடி வாங்க தேவையில்லை!

No comments:
Post a Comment